என் மலர்

    ஆன்மிக களஞ்சியம்

    சீரடி போறேங்களா? தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்
    X

    சீரடி போறேங்களா? தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீரடி தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
    • கோவிலுக்குள் சாயிபஜன் நடந்து கொண்டே இருக்கும் கோவில் முழுக்க ஒலிக்கிற மாதிரி ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் உள்ளன.

    01. சீரடியில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. வேண்டுதல்கள் வைத்திருப்பவர்கள் இந்த இரு நாட்களில் செல்லலாம்.

    02. சீரடியில் ஏராளமான ஆட்டோக்கள் உள்ளன. பெரும்பாலும் யாரும் பக்தர்களை ஏமாற்றுவதில்லை.

    03. சீரடி தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.

    04. முன்பெல்லாம் சீரடிக்கு வட இந்திய மக்கள் தான் அதிகம் வந்து சென்றனர். தற்போது தென் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் சீரடிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    05. சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.

    06. பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாலு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். அவரவர் அதிருஷ்டம் எந்த வரிசையில் அமைகிறது என்பது. உள்பக்க வரிசையில் செல்வது நல்லது. கடைசி வரிசையில் அமைத்து முன்னால் போய் விட்டால் பாபாவை பார்ப்பது சிரமமாக இருக்கும்.

    07. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை, பஜன், ஆரத்தி எல்லாம் ஆகிறது. அது வரை நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான். க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும்.

    08. விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை.

    09. ரூ.200 செலுத்தி பாஸ் பெற்ற பக்தர்களுக்கு சிறப்பு தரிசனமும் உண்டு. ஐ.எ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற முக்கிய அதிகாரிகளின் கடிதம் இருந்தால் ஏதோ ஒரு வழியாக அனுமதிக்கிறார்கள். அப்படி இருந்தாலும் கடைசியில் சன்னிதானத்துக்குள் போகும் போது எல்லாம் ஒன்றாகத்தான் போக வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு தனி வழி உண்டு. ஆனால் அதற்கு அவரவர் ஆதார் அட்டையை காட்டி கவுண்டரில் பெற்ற பாஸ் தேவை.

    10. சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம்.

    11. உண்மையில் பாபா கோவிலுக்குள் பக்தர்கள் கொண்டு வந்து தரும் எதையுமே ஏற்பதில்லை. நம்மிடமே திருப்பித் தந்து விடுகிறார்கள். ஆகவே பக்த ஜனங்களே வெறும் கையோடும் மனம் நிறைய பிரார்த்தனைகளை சாய்பாபா சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக்கொண்டால் போதும்.

    12. வெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைக்கும் படி அறிக்கை பலகை கேட்டுக் கொள்கிறது. இதுவும் அவரவர் விருப்பம் தான். கட்டாயமில்லை. ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள்.

    13. வாமன் தாத்யா என்ற சாயி பக்தர் தினமும் இரண்டு சூளையிலிடப்படாத பானைகளைக் கொடுப்பார். பாபா தம்முடைய கைகளாலேயே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.

    14. "சாய்" என்ற சொல்லுக்கு, "சாட்சாத் கடவுள்" என்ற அர்த்தமாம்.

    15. பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர்.

    16. சாய்பாபா கோவிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கி இருக்காங்க. முதல்ல கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் ஐந்து நுழைவாசல்கள் இருக்குது.

    17. கேமரா, செல்போன்களுக்கு கோவிலில் அனுமதி கிடையாது. அங்கேயே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு, நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க.

    18. மேடையில் சமாதியின் பின்புறம், இத்தாலியன் மார்பிலான பாபாவின் சிலை அழகான தங்கக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம். இந்த சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது. தூண்கள் அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே தங்கம் தகதகன்னு மின்னுது.

    19. பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவின் சமாதிக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாகக தருகிறார்கள். பாபா சிலைக்கு கோவில் சார்பில் அணிவிக்கின்ற ஒரு மாலையை தவிர வேறு அணிவிப்பது கிடையாது.

    20. கோவிலுக்குள்ள சாயிபஜன் நடந்து கொண்டே இருக்கும். அது கோவில் முழுக்க ஒலிக்கிற மாதிரி ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.

    Next Story
    ×