இமானே கெலிஃப் புகாரில் ஹாரி பாட்டர் எழுத்தாளரும் எலான் மஸ்க்க்கும் இடம்பெற்றுள்ளனர்
ரத்தத்தில் முடிந்த குத்துச்சண்டை
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் -பின் பாலினம் குறித்த சர்ச்சை விவாதங்களுக்கு வழிவகுத்தது.
66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.
முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதைத்தொடர்ந்து இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு துணை நின்றது. உலகம் முழுவதும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தது.
இதற்கிடையே இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்றார் இமானே கெலிஃப். அனைவரையும் போல் தானும் ஒரு முழுமையான பெண்தான் என்று வெற்றிக்குப் பிறகு அவர் தெரிவித்திருந்தார்.
இமானேவின் சட்டப் போராட்டம்
அதைத்தொடர்ந்து , பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் இமானே புகார் அளித்தார். மேலும் இமானே கெலிஃப் பாலின கேலி புகாரில் ஹாரி பாட்டர் எழுத்தாளரும் எலான் மஸ்க்க்கும்!.. சொன்னது என்ன?
வழக்கு தொடர்ந்து வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான போராட்டத்தை முன்னெடுப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இமானே அளித்துள்ள புகாரில் தொழிலதிபர் மற்றும் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கின் பெயரும் ஹாரி பாட்டர் நாவல் தொடர்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
மஸ்க் -ரௌலிங் சொன்னது என்ன?
போட்டிகளின் போது இமானேவின் பாலினம் குறித்த சர்ச்சை எழுந்தபோது, எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில், ஆண்களுக்கு பெண்களின் விளையாட்டில் இடமில்லை என்று இமானேவை விமர்சித்த பதிவை ரீபோஸ்ட் செய்து கண்டிப்பாக என்று மஸ்க் தெரிவித்திருந்தார்.
மேலும் ஜே .கே ரவுலிங் தனது எக்ஸ் பதிவில், 'இமானே குத்துச்சண்டை களத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, இதை பார்த்துவிட்டு, உங்களின் பொழுதுபோக்குக்காக ஒரு பெண்ணை ஆண் அடிப்பதை பற்றி விளக்கம் கொடுங்கள். சிவப்பு பனியன் அணிந்த அந்த ஏமாற்றுக்காரரை அனுமதித்தது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு, இது பெண்களுக்கு எதிராக ஆண்கள் தங்களின் சக்தியைக் காட்டிக்கொள்ளும் செயல்' என்று தெரிவித்துருந்தார்.
எலான் மஸ்க் மற்றும் ஜெ.கே.ரௌலிங் ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட lgbtq சமூகத்தினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்ததக்கது .