இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகாபடுகோனே கர்ப்பம் அடைந்ததாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை. இதை தொடர்ந்து இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இது பற்றி அவரது தரப்பு கூறுகையில்:-
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ஒரு அமைதியான பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். மற்றபடி அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வாழ்க்கையில் இப்போது அவர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் மிகவும் அழகாக வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை எதிர்நோக்கி இந்த தருணத்தில் காத்திருக்கின்றனர் என்றனர்.
இந்நிலையில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் ஒரு சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.