என் மலர்

    தமிழ்நாடு

    மகாலட்சுமி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்குவதால் மகளிர் வாழ்வு வளம் பெறும்- மாணிக்கம் தாகூர் பிரசாரம்
    X

    காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம் செய்த காட்சி.

    மகாலட்சுமி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்குவதால் மகளிர் வாழ்வு வளம் பெறும்- மாணிக்கம் தாகூர் பிரசாரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார்.
    • மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது.

    விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் இன்று அருப்புக் கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட சூலக்கரை, சின்னவள்ளி குளம், மாசி நாயக்கன்பட்டி குல்லூர் சந்தை, ராமசாமிபுரம் பால வநத்தம், கோவிலாங்குளம், பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் முடிந்ததும் மனு செய்தால், உடனடியாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார் . இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை 150 நாட்களாகவும், சம்பளத்தை 400 ஆக உயர்ததவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

    இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்வு வளம் பெறும். மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனப் பேசினார். பிராசரத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×