என் மலர்

    செய்திகள்

    வடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிக்க டிரம்ப், அபே உறுதி: ஜப்பான் அரசு
    X

    வடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிக்க டிரம்ப், அபே உறுதி: ஜப்பான் அரசு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வடகொரியா மீதான அழுத்த்தை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியேற்றுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
    டோக்கியோ:

    சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன்னர் அணுகுண்டு சோதனையும் நடத்தியது. இதனையடுத்து, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் இணைந்து வடகொரியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க உறுதியேற்றுள்ளதாக ஜப்பானின் தலைமை துணை கேபினட் செயலர் நிஷிமுரா கூறியுள்ளார்.

    அடுத்த மாதம் 5-ம் தேதி முதன் முறையாக ஜப்பானுக்கு வருகை தரும் டிரம்ப், வடகொரியா விவகாரம் தொடர்பாக அபே உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தனது பேட்டியில் நிஷிமுரா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×