என் மலர்

    செய்திகள்

    நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு
    X

    நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ள நிலையில் 35 பேர் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இங்குள்ள ஜாப்பா, மோராங், சன்சாரி, சப்ட்டாரி, சிராஹா, ரவுட்டாஹட், பன்க்கே, பர்டியா, டாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளநீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. மோராங் மாவட்டத்தில் உள்ள பிராட்நகர் விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    நாட்டின் பல பகுதிகள் சுமார் ஆயிரம் வீடுகள் வெள்ளநீரில் மூழ்கி முற்றிலுமாக அழிந்தன. சுமார் 35 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 49 பேர் உயிரிழந்ததாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது. மோராங் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 78 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் காணாமல் போன 35 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×