என் மலர்

    செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட்: அஸ்வின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பும் ஹர்பஜன் சிங், கங்குலி
    X

    ஒருநாள் கிரிக்கெட்: அஸ்வின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பும் ஹர்பஜன் சிங், கங்குலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தொடர்ந்து அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? என்பது குறித்து கங்குலி, ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இந்தியா மற்றும் ஆசியக் கண்டத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.

    இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஓய்வு குறித்து ஹர்பஜன் சிங் மற்றும் கங்குலி ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அஸ்வின் இடம்பெறாதது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதா? அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா? என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்றுதான் தகவல்கள் மூலம் நாம் புரிந்திருக்கிறோம். ஆனால், அதேவேளையில் அவர் இங்கிலாந்து சென்று கவுண்டி போட்டியில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இது என்ன வகையான ஓய்வு என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டாரா? அல்லது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை’’ என்றார்.

    கங்குலி இதுகுறித்து கூறுகையில் ‘‘ஹர்பஜன் சிங் ஏன் இப்படி குறிப்பிடுகிறார் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் எனக்கும், ஹர்பஜன் சிங்கிற்கும் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அணியின் நோக்கம் புரிந்துள்ளது. இலங்கை தொடரில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். இந்தியா மற்றும் ஆசிய கண்டத்தில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை.



    ஆனால், இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டும், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளத்திலும் குல்தீப் யாதவை முன்னிலைப் படுத்தும் வகையில், மெதுவாக குல்தீப் யாதவ் வளர்ந்து வருகிறார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×