என் மலர்

    செய்திகள்

    கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே
    X

    கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
    புனே:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி புனே மகாராஷ்டிரா அசோஷியேன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

    தொடக்க ஆட்டக்காரர்களான அஜய் ரகானே, ராகுல் திரிபாதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தது. திரிபாதி 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரகானே உடன் கேப்டன் சுமித் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர்.

    ரகானே 46(41) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் டேனியல் கிறிஸ்டியன் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கேப்டன் சுமித் 37 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

    இதனையடுத்து 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகின்றது. கொல்கத்தா அணியில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
    Next Story
    ×