என் மலர்

    செய்திகள்

    காஷ்மீரில் இதுவரை 170 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: டி.ஜி.பி. தகவல்
    X

    காஷ்மீரில் இதுவரை 170 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: டி.ஜி.பி. தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2017-ல் இதுவரை தீவிரவாத இயக்கங்களின் கமாண்டர்கள் உள்பட 170 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என போலீஸ் டி.ஜி.பி. வெய்ட் தெரிவித்துள்ளார்.
    ஜம்மு:

    ஜம்முவில் டி.ஜி.பி.யாக இருந்து வரும் வெய்ட் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று வருகின்றனர். இதனால் அங்கு செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை கண்காணித்து வந்தோம். ராணுவத்தினர், சி.ஆர்.பி.எப். மற்றும் மாநில போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதில் பல தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றோம்.



    2017-ம் ஆண்டில் இதுவரை 170 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தீவிரவாத இயக்கங்களின் கமாண்டர் பொறுப்புகளை வகித்து வந்தவர்கள்.

    மசூத் அசாரின் நெருங்கிய உறவினரான தல்லா ரஷீத், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த மெகமூது பாய், லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த அபு துஜானா மற்றும் வசீம் ஷா, ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த சப்சர் அகமது பட் உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் அடங்குவர்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×