என் மலர்

    செய்திகள்

    டெல்லியில் தீபாவளியன்று காற்று மாசு அதிகரிப்பு: ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள்
    X

    டெல்லியில் தீபாவளியன்று காற்று மாசு அதிகரிப்பு: ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெல்லியில் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மற்றும் ஒலி மாசு அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாடப்பட்டது. டெல்லியில் காற்று, ஒலி மாசுபாட்டை கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது.

    எனினும் தீபாவளியன்று தலைநகரில் பட்டாசு சத்தத்துக்கு எந்த குறையும் இருக்கவில்லை. மக்கள் பட்டாசு வெடித்ததால் தலைநகர் முழுவதும் செந்நிற ஒளி வெள்ளத்தில் மிதந்தது. இதனால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மற்றும் ஒலி மாசு அதிகரித்து உள்ளது.

    தீபாவளிக்கு முந்தைய நாள் (18-ந் தேதி) இரவு 11 மணியளவில் காற்றில் நுண்துகள்களின் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) அளவு முறையே 878 மற்றும் 1,179 மைக்ரோ கிராம் இருந்ததாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. வழக்கமான அளவான 60 மற்றும் 100 மைக்ரோ கிராம் என்ற வரையறையானது, 24 மணி நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட அளவு அதிகரித்ததாக கண்டறியப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் டெல்லியில் 18-ந் தேதி மாலையில் பட்டாசு சத்தம் குறைவாகவே இருந்தது. எனினும் போகப்போக பட்டாசுகளின் ஒலி அதிகரித்தது. டெல்லியின் அருகில் உள்ள நகரங்களான குருகிராம், நொய்டா, காசியாபாத் போன்ற பகுதிகளிலும் வழக்கம்போல பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.



    தீபாவளியன்று டெல்லியில் தீ விபத்துகளும் அதிகரித்து இருந்தன. 18-ந் தேதி நள்ளிரவு முதல் 19-ந் தேதி நள்ளிரவு வரை 204 விபத்துகள் குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதில் 51 விபத்துகள் பட்டாசுகளினால் ஏற்பட்டது ஆகும்.

    இதில் கிழக்கு டெல்லியின் சுபாஷ் மொகல்லா பகுதியில் உள்ள துணி குடோனில் ஏற்பட்ட தீ விபத்து முக்கியமானதாகும். இந்த தீயை அணைக்க 26 தீயணைப்பு வாகனங்களும், ஏராளமான வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் இந்த விபத்துகளில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.



    19-ந் தேதி நள்ளிரவுக்குப்பின்னரும் பல இடங்களில் தீ விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் கூறினர். எனினும் இது கடந்த ஆண்டை விட குறைவு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×