என் மலர்

    செய்திகள்

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: முதல்வர்
    X

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: முதல்வர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் சம்பந்தமான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் பைரன் சிங் அறிவித்துள்ளார்.

    கவுஹாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. இதுத்தொடர்பாக இன்று சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    அவரது கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் கூறியதாவது:-

    மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதை குறைக்கும் நோக்கத்தில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை மோசமாக இருப்பினும் அதைப்பொருட்படுத்தாமல் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டக்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×