என் மலர்

    செய்திகள்

    இடைவிடாது பலத்த மழை: ஒடிசா வெள்ளத்தில் மிதக்கிறது
    X

    இடைவிடாது பலத்த மழை: ஒடிசா வெள்ளத்தில் மிதக்கிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒடிசா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது பெய்து வரும் மழையால் ராயகடா மாவட்டத்தில் 80 சதவீத பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் முற்றிலும் வெளியிடத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    புவனேஸ்வரம்:

    தெற்மேற்கு பருவமழை காரணமாக ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நல்ல மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழை கொட்டியது.

    இதனால் கொராபுட், ராயகடா, கஜபதி, மல்கான்கிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ராயகடா மாவட்டத்தில் ஓடும் பன்சாதரா, நாகபாலி ஆகிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது. பல இடங்களில் ஆற்று வெள்ளம் கரையை உடைத்து சென்று ஊருக்குள் புகுந்துள்ளது.

    ராயகடா மாவட்டத்தில் 80 சதவீத பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் முற்றிலும் வெளியிடத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் கல்யாண்சிங்பூர் தாலுகா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலம் போடப்பட்டு வருகிறது.

    அங்குள்ள கிராமம் ஒன்றில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 16 பேர் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். அவர்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இன்னொரு இடத்தில் 2 பேர் மரத்தின் உச்சியில் இருந்தபடி அபய குரல் எழுப்பினார்கள். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்னொரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அதில் ஒருவர் பலியானார்.

    உத்திகுடா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அப்போது 160 மாணவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 3 இடங்களில் பாலத்தை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. ராயகடா பகுதியில் ஒடிசாவில் இருந்து ஆந்திரா செல்லும் ரெயில்வே பாதையில் ஆற்றுப்பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தை வெள்ளம் அடித்துச்சென்றுவிட்டது.

    இதனால் ஒடிசா-ஆந்திரா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாற்று பாதையில் ரெயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில்வே தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சிங்காப்பூர் என்ற இடத்தில் ரெயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்து முற்றிலும் மூழ்கிய நிலையில் உள்ளது.

    வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. எனவே மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்படையில் இருந்து 4 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    வெள்ள மீட்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் நவீன்பட்நாயக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 7 நாட்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரித்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு இடங்களிலும் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×