என் மலர்

    செய்திகள்

    கரும்பு கொள்முதல் விலையை ரூ.4 ஆயிரமாக தீர்மானிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
    X

    கரும்பு கொள்முதல் விலையை ரூ.4 ஆயிரமாக தீர்மானிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடப்பு பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையை ரூ.4 ஆயிரமாக தீர்மானிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு ஆண்டில் கரும்பு அறுவடை முடிந்து, சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் இன்னமும் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்கவில்லை.



    கடந்த ஆண்டு சர்க்கரை விலை கிலோ ரூ.27 ஆக இருந்தது. இந்த ஆண்டு ரூ.39 ஆக உயர்ந்திருப்பதால் சர்க்கரை ஆலைகள் பெரும் லாபம் ஈட்டியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிக்காமல் ஏமாற்றி வருவது ஏன் என்று தட்டிக்கேட்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்கு உரியது.



    எனவே, தமிழக அரசு இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு கரும்புப் பருவத்திற்குக் கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் என்று தீர்மானிக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத்தர உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×