என் மலர்

    செய்திகள்

    உடுமலை டி.வி.பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்
    X

    உடுமலை டி.வி.பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உடுமலையில் வாகன போக்குவரத்தால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

    உடுமலை:

    உடுமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக உடுமலை நகரில் பல்வேறு சாலைகளை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலை- தளி சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக டி.வி. பட்டினம் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகளின் உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பலர் தாங்களாகவே அந்த இடங்களை காலி செய்து வந்தனர். இதனால் காலி கட்டிடங்கள் மட்டும் இருந்தன.

    இந்த கட்டிடங்கள் உடுமலை நகராட்சி ஆணையாளர் ( கூடுதல் பொறுப்பு) கே.சரவணக்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சத்தியபாமா ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அப்போது நகராட்சி நகரமைப்பு அதிகாரி (பொறுப்பு) வெங்கடேஷ் , சுகாதார ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×