என் மலர்

    செய்திகள்

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீத இடங்களை பெற புதுவை அரசு தவறி விட்டது: கிரண்பேடி குற்றச்சாட்டு
    X

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீத இடங்களை பெற புதுவை அரசு தவறி விட்டது: கிரண்பேடி குற்றச்சாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தைப் போல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீத இடங்களை பெற அரசு தவறி விட்டது என்று கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டியுள்ளார்.
     புதுச்சேரி:

    தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு 65 சதவீத இடங்கள் பெறப்படுகிறது.

    புதுவையில் 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதில், 4 மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படுகிறது. மற்ற 3 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் ஆகும்.

    சுயநிதி மருத்துவ கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டில் அரசுக்கு 36.6 சதவீத இடங்களை மட்டுமே தந்துள்ளன. தமிழகத்தைப் போல் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீத இடங்களை பெற அரசு தவறி விட்டது என்று கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டி இருந்தார்.

    மேலும் புதுவை சட்டசபையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் பெற சட்டம் இயற்றி இருந்தால் மத்திய அரசிடமும், ஜனாதிபதியிடமும் நான் ஒப்புதல் பெற்று தந்து இருப்பேன் என கூறி இருந்தார்.

    இதற்கிடையே புதுவையில் நேற்று நடைபெறுவதாக இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை அரசு திடீரென தள்ளி வைத்தது. மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைப்பு தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி ஜெ.பி. நட்டாவுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த கடிதத்தை கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார். அதோடு முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு பதில் கடிதமும் எழுதி வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார். அதில், கவர்னர் கிரண்பேடி கூறியிருப்பதாவது:-
     

    தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பல மாநிலங்களில் பல சிறப்பு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கல்வித்துறை திட்டம் வகுக்க வலியுறுத்தி உள்ளேன்.

    அதேபோல் பட்ட மேற்படிப்பு மருத்துவ சேர்க்கை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. ஆனால், சென்டாக் சேர்க்கை வெளிப்படையாகவும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சென்டாக் கமிட்டியை சீரமைக்க கல்வித்துறைக்கு வலியுறுத்தி உள்ளேன்.

    இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுங்கள்.

    இவ்வாறு கவர்னர் கடிதத்தில் கூறியிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கவர்னரின் செயல்பாடு எரிச்சலூட்டியதால்தான் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் இடங்கள் ஒதுக்கவில்லை என தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதற்கு நான் காரணம் இல்லை. இவ்வாறு செய்வோர் யாராக இருந்தாலும் அறியாமையால் செய்கின்றனர்.

    அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழக எம்.பி. பி.எஸ். இடங்கள் நீட் தகுதியின்படி மத்திய சுகாதாரதுறை இயக்குனரால் ஒதுக்கப்படுகின்றன. இதனால் இடங்கள் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், நிகர்நிலை பல்கலைக்கழக இடங்கள் முழுவதையும் மத்திய அரசு எடுத்து கொண்டதால் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

    தமிழகத்தை போல் புதுவை அரசு தனியார் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களை பெற முயற்சிக்கவில்லை.

    கடந்த சட்டப்பேரவை கூட்டத்திலேயே இதற்கான சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

    மக்கள்தான் இது தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும்.
    நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இதற்கு ஒப்பு கொள்ளவில்லை என்றால் அவற்றின் தர நிர்ணயத்தை அரசு குறைக்கலாம். அவற்றை மீண்டும் மருத்துவ கல்லூரிகளாக மாற்றிவிட நடவடிக்கை எடுக்கலாம். அவர்களிடம் 50 சதவீத இடங்களை பெற்றிருக்கலாம்.

    இதைத்தான் முந்தைய கவர்னர் குர்ஜார் வலியுத்தி இருந்தார். அவரது பரிந்துரை என்ன ஆனது என தெரியவில்லை. சென்னை உயர்நீதி மன்ற உத்தரவால் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கவர்னர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×