என் மலர்

    செய்திகள்

    தஞ்சையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    தஞ்சையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தஞ்சையில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் அத்தியாவசிய தேவைக்கான குடிதண்ணீர், 2 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இவற்றில் ஒரு ஆழ்குழாய் கிணறு மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் குடிதண்ணீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சீரான குடிநீர் வழங்ககோரி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் ஈஸ்வரிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்றுகாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த மருத்துவகல்லூரி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பெண்கள் கூறும்போது, ஆழ்குழாய் கிணறு மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து இருந்தால் குடிநீர் பிரச்சினை வந்து இருக்காது. ஆனால் ஏற்கனவே போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் மேலும் 40 அடிக்கு குழாய் இறக்கப்பட்டதால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை தீர்க்க லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு வழங்கினார்கள். கடந்த 2 மாதங்களாக அந்த பணியும் நடைபெறவில்லை. எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதிகாரிகள் கூறும்போது 2 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று பழுது ஏற்பட்டதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் சீராக செய்யப்படும் என்றனர்.
    Next Story
    ×