என் மலர்

    செய்திகள்

    ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு: மீன்வளத்துறை
    X

    ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு: மீன்வளத்துறை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், தனுஷ் கோடி, பாம்பன் பகுதிகளில் நேற்று மாலை வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இரவு முழுவதும் இதே நிலை நீடித்தது.

    காற்றின் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின.

    இன்று வழக்கமாக மீனவர்கள் கடலுக்கு செல்லும் தினமாகும். இதற்காக விசைப்படகு மீனவர்கள் காலையிலேயே தயார் நிலையில் இருந்தனர். ஆனால் மீன்வளத்துறையினர் அவர்களுக்கு டோக்கன் வழங்கவில்லை.



    கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளி காற்றை கருத்தில் கொண்டு மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    Next Story
    ×