என் மலர்

    செய்திகள்

    அ.தி.மு.க. இணைப்பு பேச்சு விரைவில் நடக்கும்: தம்பித்துரை நம்பிக்கை
    X

    அ.தி.மு.க. இணைப்பு பேச்சு விரைவில் நடக்கும்: தம்பித்துரை நம்பிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கிடையே சுமூகமாக பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கிடையே சுமூகமாக பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இரு அணிகளும் எப்போது வேண்டுமானாலும் இணைவது சாத்தியமான ஒன்று தான்.

    எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்கும் வலிமையுடன் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

    ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவார்கள்.


    நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு வருவதற்கு அ.தி.மு.க. காரணம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, அந்த கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. எனவே நீட் தேர்வு வந்ததற்கு காங்கிரஸ் - தி.மு.க.தான் காரணமாகும்.

    இவ்வாறு தம்பித்துரை கூறினார்.
    Next Story
    ×