என் மலர்

    செய்திகள்

    பெரம்பலூர் மந்திரவாதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    X

    பெரம்பலூர் மந்திரவாதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரம்பலூர் பகுதியில் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட மந்திரவாதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி மாந்திரீக வேலைகளில் மந்திரவாதி கார்த்திகேயன் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சென்னையில் அகால மரணமடைந்த ஒரு இளம்பெண்ணின் உடலை நண்பர்கள் உதவியுடன் தோண்டி எடுத்து வந்து மந்திரவாதி கார்த்திகேயன், மகாகாளி உக்கிர பூஜை நடத்த வீட்டில் வைத்திருந்தார்.

    இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மாந்திரீகம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுதல், நோய் பரவும் வகையில் இறந்த பெண் உடலை வீட்டில் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி கார்த்திகேயன், அவரது மனைவி நசீமா உள்பட 6 பேரை கைது செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறையில் அடைத்தனர்.

    மாந்திரீகம் என்ற பெயரில் தொடர்ந்து மோசடி செய்து பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதாலும், மனித மண்டை ஓடு உள்ளிட்டவற்றை வைத்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாலும் மந்திரவாதி கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நந்தகுமாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா பரிந்துரை செய்தார். அதன் பேரில் கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திகேயனிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை பெரம்பலூர் போலீசார் வழங்கினர்.
    Next Story
    ×