என் மலர்

    சினிமா

    என் ஆளோட செருப்பக் காணோம்
    X

    என் ஆளோட செருப்பக் காணோம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ் - கயல் ஆனந்தி நடிப்பில் கலகலப்பான படமாக உருவாகியிருக்கும் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் முன்னோட்டம்.
    டிரம்ஸ்டிக்ஸ் புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.

    இதில் ‘பசங்க’ பாண்டி, தமிழ் என்ற பெயரில் புதுமுக கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பாலசரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவு - சுக செல்வன், இசை - இஷான்தேவ், கலை - என்.கே. பாலமுருகன், எடிட்டிங் - மணி டி, நடனம்  -பாலகுமார், ரேவதி, தினா, ஸ்டண்ட் - ஜி.என். முருகன், தயாரிப்பு - வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இவர் தயாரிக்கும் முதல் படம் இது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜெகன்நாத்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “நாயகி, தொலைத்த ஒரு ஜோடி செருப்புகளை சுற்றி நடக்கும் கதை.

    ஒரு அடைமழை மாதத்தில் தொலைந்த அந்த செருப்புகளை தேடி குடையுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் நாயகன்.

    இறுதியில் செருப்பைக் கண்டு பிடிக்கும் நாயகனின் முயற்சி வெற்றி பெற்றதா? தொலைந்த ஜோடி செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா? இருவரையும் அவை ஒன்று சேர்த்ததா? என்பதுதான் ‘என் ஆளோட செருப்பை காணோம்’ கதை.

    30 நாட்கள் நடக்கும் இந்த பயணத்தில் அவன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் நிகழ்வுகளை நகைச்சுவையுடனும் சுவாரசியத்துடனும் சொல்லி இருக்கிறோம்” என்றார்.
    Next Story
    ×