என் மலர்

    சினிமா

    சிவகார்த்திகேயனுடன் போட்டி போட்டால் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும்: சந்தானம்
    X

    சிவகார்த்திகேயனுடன் போட்டி போட்டால் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும்: சந்தானம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டி போட்டால் அதுவும் ஆரோக்கியமாகத் தான் இருக்கும் என்று `சக்க போடு போடு ராஜா' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் தெரிவித்தார்.
    விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா' கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில், படக்குழுவினருடனான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம், நடிகரும், தயாரிப்பாளருமான விடிவி கணேஷ், ரேபோ சங்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

    இதில் நிரூபர்களின் கேள்விகளுக்கு சந்தானம் பதில் அளிக்கும் போது,

    சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' படத்திற்கு தான் `சக்க போடு போடு ராஜா' படம் போட்டியாக இருக்கும் என்றார். விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என 5 காமெடியன்கள் சேர்ந்த நடித்திருக்கும் இந்த படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும்.



    தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் விமர்சனத்துக்கு நாளை நடைபெறும் `சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பதில் அளிப்பார்.

    அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் சந்தானம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×