என் மலர்

    சினிமா

    ‘பத்மாவதி’ பட வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 28-ந்தேதி விசாரணை
    X

    ‘பத்மாவதி’ பட வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 28-ந்தேதி விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பத்மாவதி’ திரைப்படம் வெளிநாடுகளில் வெளியிடுவதை நிறுத்தக்கோரிய வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 28-ந்தேதி நடக்க உள்ளது.
    பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல மாநிலங்கள் இந்த படத்துக்கு தடையும் விதித்து உள்ளன.

    இந்த படத்துக்கு தணிக்கைக்குழு இன்னும் சான்றிதழ் வழங்காததால் வருகிற 1-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது வெளியீட்டு தேதியை தள்ளிவைத்து உள்ளது. எனினும் வெளிநாடுகளில் 1-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ‘பத்மாவதி’ திரைப்படத்தை இந்தியாவுக்கு வெளியே 1-ந்தேதி வெளியிடுவதை நிறுத்துமாறு தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடக்கோரி எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை 28-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக ரிட் மனுவை தாக்கல் செய்யுமாறு எம்.எல்.சர்மாவை கேட்டுக்கொண்டனர்.

    எனினும் இந்திய தணிக்கைக்குழு சான்று அளிக்கும் வரை ‘பத்மாவதி’ திரைப்படத்தை எங்கும் வெளியிடப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
    Next Story
    ×