என் மலர்

    சினிமா

    தேசிய கீதம் பாடும்போது 52 வினாடி எழுந்து நிற்க முடியாதா?: அனுபம் கெர் கேள்வி
    X

    தேசிய கீதம் பாடும்போது 52 வினாடி எழுந்து நிற்க முடியாதா?: அனுபம் கெர் கேள்வி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் பாடும்போது, 52 வினாடிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்த முடியாதா? என்று இந்தி நடிகர் அனுபம் கெர் கேள்வி விடுத்துள்ளார்.
    புனேயில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தி நடிகர் அனுபம் கெர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், பூணம் மகாஜன் எம்.பி., மேதா குல்கர்னி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் அனுபம் கெர் பேசுகையில் கூறியதாவது:-

    சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கட்டாயம் அல்ல என்று சிலர் கருதுகிறார்கள். என்னை பொறுத்தமட்டில், தேசிய கீதம் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது அவர்களது ஒழுக்கமான வளர்ப்பு முறையை காட்டுகிறது.



    நாம் நமது தந்தை மற்றும் ஆசிரியர்கள் முன்பு எழுந்துநின்று மரியாதை செலுத்துகிறோம். இதேபோல், தேசிய கீதம் இசைக்கும் போதும் எழுந்துநின்று மரியாதை செலுத்துவது நாட்டுக்கே செலுத்துகிற மரியாதை. உணவகங்களில் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.

    சினிமா தியேட்டர்களில் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்து நின்று டிக்கெட் வாங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது, தியேட்டருக்குள் தேசிய கீதம் இசைக்கும் போது, 52 வினாடி எழுந்துநின்று மரியாதை செலுத்த முடியாதா?

    இவ்வாறு அனுபம் கெர் பேசினார்.
    Next Story
    ×