என் மலர்

    சினிமா

    ‘மெர்சல்’ படம் முழுவதும் தமிழன் ஆளுமை இருக்கும்: இயக்குனர் அட்லி
    X

    ‘மெர்சல்’ படம் முழுவதும் தமிழன் ஆளுமை இருக்கும்: இயக்குனர் அட்லி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் ‘மெர்சல்’ படம் முழுவதும் தமிழன் ஆளுமை இருக்கும் என்று இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.
    விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம். இதை அட்லி இயக்கி இருக்கிறார். அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்...

    “அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சினையை ‘மெர்சல்’ படத்தில் தொட்டு இருக்கிறோம். மதுரையை சேர்ந்த தளபதி என்ற பாத்திரத்தில் அப்பா விஜய் ரகளையாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக நித்யாமேனன் நடிக்கிறார். இன்னொரு விஜய் மேஜிக் செய்பவர். இந்த வேடத்துக்காக மேஜிக் கற்றார்.

    இந்த படத்தில் அப்பா, மகன் தவிர இன்னொரு விஜய் இருக்கிறார். கதைப்படி விஜய் 3 பாத்திரங்களில் வருகிறாரா? என்பது சஸ்பென்ஸ். 3 நாயகிகளில் நித்யாமேனன் வேடம் அழுத்தமானது. பக்கா லோக்கலாக சமந்தா நடித்திருக்கிறார். போலந்து, பிரான்ஸ், மெர்சிடோனியா உள்பட வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட காட்சிகளில் காஜல் அகர்வால் வருகிறார்.



    முக்கிய வேடத்தில் நடிக்கும் சத்யராஜ், வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வடிவேலு காமெடியில் மட்டுமல்ல எமோ‌ஷன் சீன்களிலும் கலக்கி இருக்கிறார்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பிரபலமாகிவிட்டது. அந்த தலைப்பை நான் அடுத்த படத்துக்கு பதிவு செய்து வைத்து இருக்கிறேன். தமிழனின் அடையாளமாக ‘மெர்சல்’ இருக்க வேண்டும் என்று நினைத்து திரைக்கதை எழுதி இருக்கிறேன். படம் முழுவதும் தமிழனின் ஆளுமை இருந்து கொண்டே இருக்கும்.

    ‘தெறி’ வெற்றி பெற கடுமையாக உழைத்தேன். இப்போது ‘மெர்சல்’ வெற்றிக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். சினிமாவில் அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் ஜெயிக்க முடியாது உழைப்பு முக்கியம்” என்றார்.

    Next Story
    ×