என் மலர்

    சினிமா

    தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் `குரங்கு பொம்மை
    X

    தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் `குரங்கு பொம்மை'

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நித்திலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `குரங்கு பொம்மை' படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது.
    ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் நித்திலன் இயக்கத்தில் சுவாரஸ்யமான திரைக்கதையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்
    `குரங்கு பொம்மை'.

    இப்படத்தில் நாயகனாக வித்தார்த்தும், நாயகியாக டெல்னா டேவிஸ்-ம் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

    அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பால் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை எஸ் போக்கஸ் நிறுவனம் சார்பில் சரவணன் கைப்பற்றியிருக்கிறார்.



    இதுகுறித்து சரவணன் பேசும் போது,

    ''திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. 'குரங்கு பொம்மை' படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்'' எனக் கூறினார்.
    Next Story
    ×