என் மலர்

    சினிமா

    நடிகை கடத்தல் வழக்கு: பல்சர் சுனிலின் ஜாமீன் மனு தள்ளுபடி
    X

    நடிகை கடத்தல் வழக்கு: பல்சர் சுனிலின் ஜாமீன் மனு தள்ளுபடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கார் டிரைவரான பல்சர் சுனில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரிலேயே திலீப்பை போலீசார் கைது செய்தனர்.

    பல்சர் சுனில் கைதாகி 2 மாதங்களுக்கு மேல் ஆவதால் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என பல்சர் சுனில் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பல்சர் சுனிலுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு பல்சர் சுனிலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.



    இதுதொடர்பாக கோர்ட்டு அளித்த உத்தரவில் பல்சர் சுனிலுக்கு குற்றப்பின்னணி இருப்பதாக கோர்ட்டு கருதுகிறது. இவருக்கு எதிராக பல ஆதாரங்களும் உள்ளன. ஓடும் காரில் நடிகையை பலாத்காரம் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் இவருக்கு ஜாமீன் வழங்க இயலாது என கோர்ட்டு தெரிவித்ததுள்ளது.

    இதற்கிடையே காவ்யா மாதவன், டைரக்டர் நாதிர்ஷா ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவும் கேரள ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
    Next Story
    ×