என் மலர்

    சினிமா

    ஸ்பைடர் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் கெடுபிடி
    X

    ஸ்பைடர் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் கெடுபிடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பவுன்சர்களின் கெடுபிடி அதிகமாக இருந்தது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஸ்பைடர்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி வெளியாகிறது.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழ்பட நாயகனாக அறிமுகம் செய்யும் விழா வருகிற சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதேசமயம், பாதுகாப்பு என்ற பெயரில் பவுன்சர்களின் கெடுபிடி அதிகமாக இருந்தது. அரங்கம் முழுவதும் பவுன்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவர்களின் கெடுபிடியில் பத்திரிகையாளர்களும் தப்பவில்லை.

    மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் என்பதால், அவரது ரசிகர்கள் பலர் இவ்விழாவிற்கு வந்திருந்தனர். ரசிகர்களுக்கு சிறப்பு பாஸ் கொடுத்து அனுப்பினர். இந்நிகழ்ச்சிக்கான ஒளிபரப்பு உரிமம் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டிருப்பதால் நிகழ்ச்சியை ஊடகங்கள் வீடியோ எடுக்க அனுமதி இல்லை. ஆனால், பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், அவர்கள் அடையாள அட்டைகளை காட்டினால்தான் உள்ளே அனுமதித்தனர். பத்திரிகையாளர்தான் என பிஆர்ஓ எடுத்துக் கூறியும், பவுன்சர்கள் கண்டுகொள்ளவில்லை.

    எப்போதும் முதன்மை டிவி என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் தனியார் தொலைக்காட்சி இந்த இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு உரிமையை பெற்றிருக்கிறது. இவர்கள் உரிமை பெறும் நிகழ்ச்சிகளில் பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.
    Next Story
    ×