என் மலர்

    சினிமா

    சரித்திரப் படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா?
    X

    சரித்திரப் படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தை சிவா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ‘வீரம்', 'வேதாளம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து 'விவேகம்' படத்தை உருவாக்கினார் இயக்குனர் சிவா. இப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்திருந்தார்.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் படத்தை சிவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திடம் சிவா நிறைய கதைகள் கூறியிருக்கிறார். அஜித்துக்கு ஏற்றக் கதையைத் அவர் தேர்வு செய்தவுடன் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    முந்தைய 3 படங்கள் வெவ்வேறு களத்திலிருந்ததோ, அதே போன்று அடுத்த படமும் வேறொரு களத்திலிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனேகமாக சரித்திரப் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×