என் மலர்

    சினிமா

    ரஜினி ரசிகர்களுக்கு நாளை விருந்து கொடுக்கும் சங்கர்
    X

    ரஜினி ரசிகர்களுக்கு நாளை விருந்து கொடுக்கும் சங்கர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஜினியை வைத்து ‘2.O’ படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வரும் சங்கர், நாளை இப்படத்தின் சிறுபகுதியை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘2.O'. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். மேலும் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழில் எந்தப் படத்திற்கும் இல்லாத அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சிறுபகுதியை நாளை மாலை 6 மணியளவில் வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் அறிவித்திருக்கிறார்.


    இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் இந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியாக இருந்தது. சில காரணங்களால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.
    Next Story
    ×