என் மலர்

    சினிமா

    அஜித் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம்: பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்
    X

    அஜித் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம்: பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    'விவேகம்' திரைப்படம் வெளியாகும் போது அஜித் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் வேண்டாம் என்று பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    பொதுவாக பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது, அவர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை ரசிகர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அஜித் நடித்துள்ள விவேகம் படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. இதற்கு அவரது ரசிகர்கள் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். அப்படி செய்ய வேண்டாம் என்று பால் முகவர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

    இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் 'விவேகம்' திரைப்படம் வெளியாகும் போது அவரது கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என அறிவுறுத்துவதோடு, கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்ற கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, அதற்குப் பதிலாக 'விவேகம்' திரைப்படம் வெளியாகும் திரையரங்க வளாகங்களில் முதல் 10 நாட்களுக்கு ரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் மற்றும் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடத்திடவும் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை நடிகர் அஜித்தின் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டோம்.

    ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அஜித்தின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றுகிற லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் எங்களது சங்கத்தின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய 3 பக்க கடிதத்தை கடந்த 04.08.2017 அன்று பதிவு தபால் வாயிலாக நடிகர் அஜித்துக்கு அனுப்பினோம்.

    தமிழர்கள் இனியாவது நடிகர்களுக்கு ரசிகர்களாக இருந்து விட்டில் பூச்சிகளாக மாறி தங்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வீணாக்க வேண்டாம். சமூக பொருளாதாற அக்கறையோடு செயல்பட வேண்டும்'' என்று அறிக்கையில் கூறப்படுள்ளது.
    Next Story
    ×