என் மலர்

    சினிமா

    நட்சத்திர அந்தஸ்து என்றாலே ‘கான்’ நடிகர்களை நினைப்பது நியாயம் அல்ல: அமீர்கான்
    X

    நட்சத்திர அந்தஸ்து என்றாலே ‘கான்’ நடிகர்களை நினைப்பது நியாயம் அல்ல: அமீர்கான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நட்சத்திர அந்தஸ்து என்றதுமே, 3 ‘கான்’ நடிகர்களையும் நினைப்பது நியாயமானது அல்ல என்று நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
    இந்தி நடிகர் அமீர்கானின் நடிப்பில் அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் படம், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’. இதன் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில், நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான, திறமைவாய்ந்த நடிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆகையால், நட்சத்திர அந்தஸ்து என்றதுமே 3 ‘கான்’ நடிகர்களையும் (ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான்) நினைப்பது நியாயமானது அல்ல.

    சமீபத்தில் வெளியான நடிகர் அக்‌ஷய் குமாரின் ‘டாய்லெட்: ஏக் பிரேம் கத்தா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை மக்கள் மிகவும் ரசித்து பார்க்கிறார்கள்.



    ஆக்கப்பூர்வமான ஒவ்வொரு நபரும் ஏற்ற, இறக்கங்களை கடந்து தான் வர வேண்டும். நல்ல படங்களை கொடுக்க நாங்கள் அனைவரும் முயற்சிக்கிறோம். ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். சில சமயங்களில் நாங்கள் வெற்றி பெறலாம். சில சமயங்களில் தோல்வி அடையலாம். இருந்தாலும், இந்த வெற்றி- தோல்வி நட்சத்திர அந்தஸ்து மீது நேரடி தாக்கத்தை உடனடியாக ஏற்படுத்தாது என்று நான் கருதுகிறேன்.

    தோல்வியை கண்டு நாம் துவண்டு போய்விட கூடாது. நாம் நம்புகிற செயலை நோக்கி தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு நடிகர் அமீர்கான் தெரிவித்தார்.
    Next Story
    ×