என் மலர்

    சினிமா

    ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா தற்கொலை முயற்சி பற்றி நடவடிக்கை எடுக்க மனு
    X

    ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா தற்கொலை முயற்சி பற்றி நடவடிக்கை எடுக்க மனு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பற்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
    பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில், தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்காக பிரமாண்டமான வீடு போன்ற அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற திரைப்பட நடிகை ஓவியா, நேற்று முன்தினம் மாலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து படப்பிடிப்பு நடக்கும் தளத்துக்கு விரைந்து சென்ற நசரத்பேட்டை போலீசார், அங்கு விசாரணை நடத்தினர். ஆனால் நடிகை ஓவியா, தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. அவர் சற்று மன உளைச்சலில் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக தெரிவித்தனர்.

    நிகழ்ச்சி தொடக்கத்தில் ஆரவ், ஓவியா இருவரும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் ஓவியா, ஆரவிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்றார். ஆனால் அதை ஆரவ் ஏற்க மறுத்து அவரிடம் இருந்து பேசாமல் விலகி விட்டார். ‘பிக்பாஸ்’ குடும்பத்தில் உள்ளவர்களும் ஓவியாவுடன் பேசாமல் இருந்தனர்.

    இதனால் விரக்தி அடைந்தது போல் காணப்பட்ட ஓவியா, தற்கொலைக்கு முயன்றதாக நேற்று முன்தினம் தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா, நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயற்சி செய்வது போல் காட்சிகள் வெளியானது. ஆனால் பாடல் ஆசிரியர் சினேகன் உள்ளிட்டோர் அவரை மீட்டு விட்டனர்.

    இதையடுத்து ஓவியாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். யாரும் பதற்றப்பட வேண்டாம். ஓவியாவின் மானேஜர் மற்றும் டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 45 நிமிடங்களில் அவர்கள் வந்து விடுவார்கள். அதன் பிறகு ஓவியா வெளியே அழைக்கப்படுவார் என மைக்கில் கூறுவது போல் நிகழ்ச்சியில் காண்பித்தனர்.



    அப்போது அவர், கேமராவை பார்த்து ரசிகர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம். நான் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். தொடர்ந்து அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று சொன்னால் மீண்டும் வருவேன். இல்லை நான் வெளியே சென்று விடுவேன் என்று உருக்கமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சி விவகாரத்தில் போலீசார் தலையிட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் எஸ்.எஸ்.பாலாஜி என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஹெலன் என்கிற ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொலைக்காட்சி டி.ஆர்.பி.யை உயர்த்துவதற்காக இது போன்று நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா? என்பது குறித்தும் தொலைக்காட்சி நிறுவனம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×