என் மலர்

    சினிமா

    சினிமா தியேட்டர்கள் 2-வது நாளாக மூடப்பட்டன: சமரச பேச்சுவார்த்தை தீவிரம்
    X

    சினிமா தியேட்டர்கள் 2-வது நாளாக மூடப்பட்டன: சமரச பேச்சுவார்த்தை தீவிரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் 2-வது நாளாக மூடப்பட்டன. கேளிக்கை வரி பிரச்சினை குறித்து அமைச்சர்களுக்கும், திரையுலகினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கிறது.
    சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்று இரண்டு வகை ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது. 100 ரூபாய்க்கும் குறைவான கட்டணமுள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்றும், 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணமுள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் என்றும் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    பிராந்திய மொழி படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திரையுலகினர் விதித்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தொடர்ந்து டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் நிறைவேற்றி உள்ளது.

    இரட்டை வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று முன்தினம் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தினார்கள். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இந்த போராட்டத்தில் அவர் கள் ஈடுபட்டு உள்ளனர்.



    நேற்றும்(செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 1,000 தியேட்டர்களில் அனைத்து சினிமா காட்சிகளும் இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டன.

    சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருந்த 10 புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து படங்களை மீண்டும் திரையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் தமிழக அரசுக்கும் திரையுலகினருக்கும் இடையே கேளிக்கை வரி பிரச்சினை குறித்து தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அமைச்சர்களையும் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்(பெப்சி) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.

    பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் திரையுலக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். கேளிக்கை வரி முழுமையாக ரத்து செய்யப்படுமா? அல்லது 30 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இன்று(புதன் கிழமை) போராட்டம் வாபஸ் பெறப்பட்டு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×