என் மலர்

    சினிமா

    ஜெயலலிதா அறிவித்த பெண்கள் திட்டங்களை அரசு முழுமையாக்க வேண்டும்: கவுதமி பேட்டி
    X

    ஜெயலலிதா அறிவித்த பெண்கள் திட்டங்களை அரசு முழுமையாக்க வேண்டும்: கவுதமி பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கான திட்டங்களை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கரூரில் நடிகை கவுதமி பேட்டி அளித்தார்.
    கரூர் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற புற்று நோய் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொள்ள நடிகை கவுதமி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புற்றுநோயை பொறுத்த வரை வராமல் தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது வந்த பின் அதில் அதிக கவனம் செலுத்தி அதனை குணப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சமூகத்தில் பெண்கள் தைரியமாக மற்றும் சுய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அந்த காலத்தில் இருந்தது போல நவீன காலத்திலும் தொடர்ந்து வருகிறது. தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்கள் மூலம் பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆண்களும் அக்கறையோடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்.



    கடந்த 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது முதல் அமைச்சராக பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அவர் கொண்டு வந்த பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் போதிய அளவு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனது பங்குக்கு (கவுதமி) நானும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறேன். புற்றுநோய் குறித்து நகர்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.



    விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்தால் தான் அன்றாடம் நமது தேவை பூர்த்தியாகிறது. விவசாயிகளையும், கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. சமுதாயத்தில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.

    நகர்புறங்களில் இருப்பது போல கிராமபுறங்களிலும் அனைத்து வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ரஜினி, விஜய் அரசியலில் இறங்க காய் நகர்த்துவதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கவுதமி, ரஜினி, விஜய் என யார் அரசியலுக்கு வந்தாலும் அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×