என் மலர்

    சினிமா

    சங்கமித்ரா படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்
    X

    சங்கமித்ரா படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் படம் ‘சங்கமித்ரா’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.

    இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், பிற நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலிவுட் கேமராமேன் சுதீப் சட்டார்ஜி ஒப்பந்தமாகியிருந்தார்.



    தற்போது, அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் அறிவிக்கவிட்ட தேசிய விருது பட்டியலில் ஒளிப்பதிவாளர் திரு, சூர்யா நடித்த 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சங்கமித்ரா படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 
    Next Story
    ×