என் மலர்

    சினிமா

    வடிவேலு, சிங்கமுத்துவுக்கு பிடிவாரண்டு: ஐகோர்ட்டு எச்சரிக்கை
    X

    வடிவேலு, சிங்கமுத்துவுக்கு பிடிவாரண்டு: ஐகோர்ட்டு எச்சரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நில மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை புறநகரில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சில சொத்துக்களை வாங்கினார். இந்த சொத்துக்களை மற்றொரு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, வடிவேலுவுக்கு வாங்கிக் கொடுத்தார். இந்த சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் வடிவேலுவுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட கங்கா உள்பட 5 பேர் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகியோர் இடையே இருந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டதாகவும், எனவே இந்த மோசடி வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் இருதரப்பு வக்கீல்கள் சார்பில் கூறப்பட்டது.

    இதையடுத்து, வடிவேலுவையும், சிங்கமுத்துவையும் ஏப்ரல் 7-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-



    தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்வதாக இருதரப்பினரும் கூறியதால், அதனால் அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டேன். ஆனால், அவர்கள் இருவரும் வரவில்லை. அதற்கு அற்பத்தனமாக காரணங்களை இருதரப்பினர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கூறுகின்றனர். அவர்கள் நேரில் ஆஜராகாதது, கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.

    எனவே, இந்த வழக்கை வருகிற 20-ந் தேதி தள்ளிவைக்கிறேன். அன்று பிற்பகல் 2.15 மணிக்கு வடிவேலும், சிங்கமுத்துவும் நேரில் ஆஜராக வேண்டும். அப்படி ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கவும் இந்த ஐகோர்ட்டு தயங்காது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×