என் மலர்

    சினிமா

    விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?
    X

    விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    7 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிக்கவிருந்த படத்தில், தற்போது விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
    பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன்  நடித்த அதிரடி திரைப்படமான `தம்பி' வெளியானது. அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான் நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்' என்ற படத்தை சீமான் இயக்கவிருந்தார். இப்படத்தை  கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அப்படத்திற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி  நடைபெற்று வந்த நிலையில், அந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகாமல் அதற்கான பணிகள் கிடப்பில்  போடப்பட்டது.



    இந்நிலையில், `பகலவன்' படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில்  விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில்  வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    Next Story
    ×