என் மலர்

    சினிமா

    ஜல்லிக்கட்டு வன்முறைக்கு எல்லா போலீசாரையும் குற்றம் சொல்லக்கூடாது: சூர்யா
    X

    ஜல்லிக்கட்டு வன்முறைக்கு எல்லா போலீசாரையும் குற்றம் சொல்லக்கூடாது: சூர்யா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜல்லிக்கட்டு வன்முறைக்காக எல்லா போலீசாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகமான ‘சி-3’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா, சுருதிஹாசன் நடித்து உள்ளனர். ஹரி டைரக்டு செய்துள்ளார். கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார். இந்த படம் குறித்து நடிகர் சூர்யா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றன. இதுவரை 35 படங்களில் நடித்துவிட்டேன். ஒரே இயக்குனருடன் 4 அல்லது 5 படங்களில் பணியாற்றுவது அரிது. ஆனால் டைரக்டர் ஹரியுடன் அது நடந்திருக்கிறது.

    சினிமாவில் அறிமுகமானபோது துரைசிங்கம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்றோ, எனக்காக அந்த கதாபாத்திரம் உருவாக்கப்படும் என்றோ நினைத்து பார்க்கவில்லை.

    ‘சிங்கம்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே தான் இப்போது அதன் 3-ம் பாகத்தையும் உருவாக்கி உள்ளோம். இது முந்தைய படங்களை விட சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்துக்காக 120 நாட்கள் நடித்தேன். எல்லோரும் கடுமையாக உழைத்தார்கள். 300 பேரை வைத்து டைரக்டர் ஹரி வேலை வாங்கினார்.

    ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பாக இசையமைத்து உள்ளார். 200 இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

    இவ்வாறு நடிகர் சூர்யா கூறினார்.

    இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவிடம், “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசார் மீது மாணவர்கள் கோபமாக இருக்கும் இந்த நேரத்தில் போலீஸ் கதையம்சத்தில் ‘சி-3’ படம் வெளியாகிறதே?”, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில்அளித்த சூர்யா, “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில இடங்களில் வருத்தப்படும்படியான அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. சில போலீசார் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையே குற்றம் சொல்ல முடியாது. திருச்சியில் போலீஸ் அதிகாரி மயில்வாகனன் அமைதியான முறையில் மாணவர்கள் போராட்டத்தை தீர்த்து வைத்திருக்கிறார். இதுபோன்ற போலீஸ் அதிகாரிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறோம். இருட்டறையில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றினாலே ஒட்டுமொத்த இருட்டையும் அது நீக்கும். வாழ்க்கையில் சிறந்த முன்மாதிரியாக இருப்பவர்களை பின்பற்றுவது நல்லது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியை இந்த படத்தின் கதை பிரதிபலிக்கும்”, என்றார்.
    Next Story
    ×