என் மலர்

    சினிமா

    ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: டி.ராஜேந்தர்
    X

    ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: டி.ராஜேந்தர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    “ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு மீது இருந்த தடை நீங்கியிருக்கிறது. இந்த அறவழிப் போராட்டத்திற்கு துணை நின்ற படித்த இளைஞர்களுக்கும், பண்பட்ட மாணவர்களுக்கும் பாரம்பரியத்தை காக்கத் துடித்த உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கும், பொங்கி எழுந்த பொதுமக்களுக்கும், போராடிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நன்றி.

    இந்த அறவழிப்போராட்டத்தை கண்டு டெல்லிக்கு ஓடிச்சென்று பிரதமர் மோடியை சந்தித்து பின் அவசர சட்டத்தை இயற்றி சட்டசபையில் ஒப்புதல் பெற்று, ஜல்லிக்கட்டு மீது இருந்த தடையை நீக்க வழிவகுத்த முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசுக்கும், அதற்கு பக்கபலமாக நின்று ஒத்துழைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் நன்றி.

    ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அ.தி.மு.க.வில் இருந்த அத்தனை பேருக்கும் மத்தியில், பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் ஆவதற்கு ஆண்டவரே கொடுத்தார் வாய்ப்பு. இப்போது அம்மா இல்லாத நேரத்திலும் அவருக்கே வாய்ப்பா? என்று சிலருக்கு வந்திருக்கிறது அங்கலாய்ப்பு. அதனால் தானோ இந்த அறப்போராட்டத்தின் முடிவிலே முதல்வருக்கு சின்ன சிராய்ப்பு. சிலர் அவருக்கு வரவழைக்க நினைத்திருக்கிறார்கள் கெட்ட பேரு. அதனால்தான் இடையில் புகுந்து இழுக்க நினைத்திருக்கிறார்கள் தேரு.

    இல்லையென்றால் இந்த அறவழிப்போராட்டம் ஆறு நாளும் அமைதியாகத்தானே போய்க் கொண்டிருந்தது. ஏழாவது நாள் எங்கிருந்து வந்தது இந்த தடாலடி மாற்றம், காவல்துறையின் அடாவடி சீற்றம். திரைக்கதையை மாற்றியது யார்? திரை மறைவில் நின்று சூழ்ச்சியை செய்தது யார்? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே, தன் கையால் வன்முறையை கட்டவிழ்க்கும் காட்சிகள் எங்கிருந்து வந்தது? இளைஞன் ஒருவனை கீழே பிடித்து தள்ளும் காட்சி, வாகனங்களை கீழே தள்ளி நொறுக்கும் காட்சி, ஆட்டோவிற்கு தீ வைக்கும் காட்சி, குடிசைக்கு தீவைப்பது போன்ற காட்சி.

    இது என்ன சினிமாவா? இல்லை நிஜமா? இல்லை திறம்பட செயல்பட முடியாத ஒரு ஆட்சியா? இது மக்கள் கேட்கும் கேள்வி. புயல்தான் கொள்ளுமாம் மையம், இப்பொழுது தமிழக அரசுக்குள்ளே புகுந்திருக்கிறதோ ஒரு புது அதிகார மையம், என்பதே பலரது ஐயம். உண்மையிலேயே இதற்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும். அறப்போராட்டத்திற்குள்ளே நுழைந்து தீ வைப்பதற்கு புகுந்த தீய சக்திகள் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

    சரித்திரம் படைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்றாலும் கேள்வி கேட்க நாதியில்லை, அப்படியே கேள்வி கேட்டாலும் நீதி இல்லை. இதுவரை தமிழக அரசு அம்மாவின் சாவில் இருக்கும் மர்மம் குறித்து வெள்ளை அறிக்கையும் கொடுக்கவில்லை.”

    இவ்வாறு அறிக்கையில் டி.ராஜேந்தர் குறிப்பிட்டு உள்ளார்.
    Next Story
    ×