என் மலர்

    சினிமா

    மலையாளத்தில் வைரமுத்துவின் சிறுகதைகள் தொகுப்பு நாளை வெளியீடு
    X

    மலையாளத்தில் வைரமுத்துவின் சிறுகதைகள் தொகுப்பு நாளை வெளியீடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் தொகுப்பு நூல் கேரளாவில் நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    கவிஞர் வைரமுத்து எழுதிய ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூல் 3 மாதங்களில் 9 பதிப்புகள் கண்டதாகும். அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாத்ருபூமி பதிப்பித்திருக்கும் இந்த நூலை ஞானபீடம் பரிசுபெற்ற புகழ்மிக்க மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நாளை (சனிக்கிழமை) கேரளாவில் வெளியிடுகிறார். நூலின் முதற்படியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொள்கிறார். கே.எஸ்.வெங்கிடாசலம் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

    மலையாள இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா கோழிக்கோட்டை அடுத்த திரூரில் கொண்டாடப்படுகிறது. துஞ்சன் திருவிழா என்று ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் நடைபெறும் அந்தக் கலை இலக்கியத் திருவிழாவில் அகில இந்திய அறிஞர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொள்கிறார்கள். டெல்லி சாகித்ய அகாடமியுடன் இணைந்து துஞ்சன் அறக்கட்டளை இவ்விழாவை நடத்துகிறது.

    இந்த ஆண்டு துஞ்சன் இலக்கியத் திருவிழாவைக் கவிஞர் வைரமுத்து தொடங்கிவைக்கிறார். இந்திய இலக்கியத்தில் பன்முகப் பண்பாடு என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிறுகதைகள் நூல் அதே மேடையில் வெளியிடப்படுகிறது.

    இந்த விழாவில் டெல்லி சாகித்ய அகாடமியின் செயலாளர் கே.சீனிவாச ராவ், சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளர் எஸ்.பி.மகாலிங்கேஸ்வர், கேரளப் பண்பாட்டுத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், பாராளுமன்ற உறுப்பினர் இ.டி.முகமது பஷீர், மலப்புரம் மாவட்ட கலெக்டர் அமித் மீனா மற்றும் மலையாளம், தமிழ், இந்தி, ஒடியா, வங்காளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் எழுத்தாளர்களும் பங்குபெறுகிறார்கள்.

    மேற்கண்ட தகவல் கவிஞர் வைரமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×