என் மலர்

    சினிமா

    கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி வழக்கு
    X

    கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்த படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இந்த படம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ‘லிங்கா’ படப்பிரச்சினைக்கு முதன்மை காரணமாக விளங்கிய சிங்காரவேலன்தான் இப்படத்திற்கும் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வேந்தர் மூவிஸ் மதன் தனக்கு பணம் தரவேண்டும் என்றும் அவர் தலைமறைவாக உள்ளதால் அவருடைய பங்குதாரர் டி.சிவா பெயரில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட முயற்சிகள் நடப்பதாகவும், இந்த படத்தை வெளியிட்டுவிட்டால் தன்னால் பணத்தை வசூலிக்க முடியாது எனவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த மனு மீதான விசாரணையில் வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, மதனின் பங்குதாரரான டி.சிவாவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×