என் மலர்

    சினிமா

    இந்திய ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்: நானா படேகர்
    X

    இந்திய ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்: நானா படேகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் எல்லையில் போரிடும் நமது ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்று நடிகர் நானா படேகர் பேசியுள்ளார்.
    காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடைக்கு இந்தி நடிகர் சல்மான்கான் ஆட்சேபனை தெரிவித்தார். “பாகிஸ்தான் நடிகர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல, கலையையும், பயங்கரவாதத்தையும் ஒன்று சேர்க்கக்கூடாது” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

    சல்மான்கானின் சர்ச்சை கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தி நடிகர் நானா படேகர் சல்மான்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் புனேயில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிடும் நமது ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களை விட வேறு யாரும் சிறந்த ஹீரோக்களாக இருக்க முடியாது. இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலையில், நாட்டை பற்றி சிந்திப்பதே ஒவ்வொரு குடிமகனின் கடமை. கலைஞர்களோ, நடிகர்களோ நாட்டை விட மேலானவர்கள் அல்ல. தேசத்துக்கு முன்பு நடிகர்கள் மூட்டை பூச்சிகளை போன்றவர்கள். நடிகர்கள் சாதாரண மனிதர்கள். பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றும் வீரர்களால் தான் நாம் நிம்மதியாக தூங்க முடிகிறது.

    பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எந்த அரசியல் அமைப்புகளும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

    இவ்வாறு நானே படேகர் கூறினார்.

    நடிகர் சல்மான்கான் கருத்துக்கு மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

    இருவரும் நண்பர்கள் என்ற நிலையில், இதுபற்றி தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்தாக்கரே பேசுகையில், தேசம் மற்றும் மாநில நலனை விட நட்பு மேலானது அல்ல என்று தெரிவித்தார்.
    Next Story
    ×