என் மலர்

    சினிமா

    டிஜிட்டலில் வெளியாகும் சிவாஜி நடித்த ராஜபார்ட் ரங்கதுரை
    X

    டிஜிட்டலில் வெளியாகும் சிவாஜி நடித்த ராஜபார்ட் ரங்கதுரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிவாஜி கணேசன் நடித்த ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படம் 43 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது.
    சிவாஜி கணேசன் நடித்து 1973-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ராஜபார்ட் ரங்கதுரை.’ இதில் நம்பியார், வி.கே.ராமசாமி, டி.கே.பகவதி, எஸ்.வி.ராமதாஸ், உஷாநந்தினி, மனோரமா, ஸ்ரீகாந்த், சுருளிராஜன் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்.’ ‘பாரதமே என்னருமை பாரதமே,’ ‘ஜின் ஜினுக்காம் சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக் கிளி,’ ‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்’ ஆகிய இனிமையான பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. பி.மாதவன் டைரக்டு செய்து இருந்தார்.

    இந்த படத்தில் சிவாஜி கணேசன் தேச பக்தி கொண்ட நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். நந்தனார், ஹரிச்சந்திரன், ஹாம்லட், பகத்சிங், திவான் பகதூர், கிறிஸ்துமஸ் தாத்தா ஆகிய வேடங்களில் அவர் மேடையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

    இறுதி காட்சியில் திருப்பூர் குமரனாக மேடையில் தோன்றி கொடியவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு அவர் மீது தேசிய கொடியை போர்த்தும் காட்சி உருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

    ராஜபார்ட் ரங்கதுரை படம் தற்போது நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஒலி-ஒளி காட்சிகள் மெருகேற்றப்பட்டு உள்ளன. தீபாவளியன்று இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ஏற்கனவே சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், வசந்த மாளிகை, பாசமலர், சிவகாமியின் செல்வன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×