என் மலர்

    சினிமா

    ஏ.ஆர்.ரகுமான், காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்களா?
    X

    ஏ.ஆர்.ரகுமான், காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்களா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஏ.ஆர்.ரகுமான், காஜல் அகர்வால் ஆகியோர் மீண்டும் விஜய்யுடன் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்.
    விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லி படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால் ஏற்கெனவே, விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இப்படத்தின் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமானும் விஜய் நடித்த ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு தகவல்களும் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தாலும், விரைவில் அந்த தகவல்கள் உறுதியாகும் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பது குறிப்படத்தக்கது.
    Next Story
    ×