என் மலர்

    சினிமா

    விதார்த்துடன் நேரடியாக மோதும் சசிகுமார்
    X

    விதார்த்துடன் நேரடியாக மோதும் சசிகுமார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கிடாரி' மற்றும் விதார்த்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குற்றமே தண்டனை' ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளியாகின்றன.

    'வெற்றிவேல்' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நாயகனாக நடித்து, தயாரித்திருக்கும் படம் 'கிடாரி'. அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகியாக நிகிலா விமலும் முக்கிய வேடங்களில் சுஜா வருணீ, நெப்போலியன், வேலார் ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    'ராஜதந்திரம்', 'மோ' படங்களில் நடித்த தர்புக சிவா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்தைத் தொடர்ந்து படக்குழு தணிக்கைக்கு விண்ணப்பித்தது.

    படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு வன்முறைக்காட்சிகள் அதிகமிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. தணிக்கையைத் தொடர்ந்து இப்படம் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என சசிகுமார் அறிவித்தார்.

    அதேநாளில் விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குற்றமே தண்டனை' திரைப்படமும் வெளியாகிறது. இதனால் சசிகுமாருடன் விதார்த் நேரடியாக பாக்ஸ் ஆபிசில் மோதும் சூழல் உருவாகியிருக்கிறது.

    'காக்கா முட்டை' புகழ் மணிகண்டன் படமென்பதால் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குற்றமே தண்டனை' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான எதிர்பார்ப்பு நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×