என் மலர்tooltip icon
    • மியான்மரில் நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.
    • தாய்லாந்திலும் அதிர்வுகள் உணரப்பட்டது.

    மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்டது. அங்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


     

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

     


    இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலும் உணரப்பட்டது.

    • ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா?
    • அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் உரையாற்றினார்.

    உரை தொடக்கத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம் என தெரிவித்து அவர் பேசியதாவது:-

    * தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இன்றைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாம் புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    * அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? எது அரசியல்? எல்லாரும் நடக்கும் என்பது தான் அரசியல். அதுதான் நம் அரசியல்.

    * காட்சிக்கு திராவிடம்.. ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல் நடத்துற இவங்க நமக்கு எதிராக பண்ணுகிற செயல்கள் ஒன்றா, இரண்டா... மாநாட்டில் ஆரம்பித்தது... புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், 2-ம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் இப்படியெல்லாம் தடைகள். அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.

    * மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே...

    * ஒன்றியத்தில் பாஜக அரசை பாசிச அரசு என்று அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு விட்டு நீங்க பண்றது என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சிதானே. ஒர கட்சி தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழக தோழர்களையும், என் நாட்டு மக்களையும் பார்க்கறதுக்கும் சந்திக்குறதுக்கும் தடை போறது நீங்க யார்?

    இவ்வாறு அவர் பேசினார். 

    • தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிச்சி பிரதமர் சார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து பேசிய விஜய் மத்திய அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறியதாவது:-

    * இங்க நீங்கதான் இப்படி என்றால் அங்க அவங்க. யாரு? உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேல... மாண்புமிகு மோடிஜி அவர்களே... என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு என்னவோ பயம் மாதிரியோ... அப்படி ஒரு விஷயத்தை சொல்றது. பேர சொல்லணும்... பேர சொல்லணும்...

    * சென்டரில் ஆளுகிறவங்கன்னு சொல்றோம். சென்டரில் யார் ஆளுறா? காங்கிரசா? இங்க ஸ்டேட்ல ஆள்றாங்கன்னு பேசுறோம். இவங்க யார் ஆள்றா.. அதிமுகவா? அப்புறம் என்ன பேர சொல்லணும்... பேர சொல்லணும்... புரியலையே?

    * ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிக்கறதுக்காக உங்களோட அதாவது பா.ஜ.க.வோட மறைமுக கூட்டணி. இப்படி உங்க பேரை சொல்லியே மக்களை ஏமாத்துறதும், உங்க பேரை சொல்லியே மக்களை பயப்படுத்துறதும்... இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடும், தமிழர்கள் என்றாலே அலர்ஜி?

    * தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க. இங்க படிக்கிற பிள்ளைகளின் படிப்புக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறீங்க.. ஆனால் மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டோட பாராளுமன்ற தொகுதியில் கை வைக்க பார்க்குறீங்க...

    * ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிடிச்சி பிரதமர் சார். உங்க ப்ளான் என்னன்னு? எங்கெல்லாம் எப்படியெல்லாம் எந்த திசைக்கெல்லாம் இந்த நாட்டை கொண்டு போகலாம்ன்னு.

    * சார் உங்ககிட்ட நாங்க சொல்லிக்கிறது எல்லாம்... தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பலபேருக்கு தண்ணி காட்டுன்ன ஸ்டேட் சார்.... பலபேருக்கு தண்ணி காட்டின்ன ஸ்டேட் சார்... பாத்து சார்... பாத்து செய்ங்க சார். மறந்துடாதீங்க சார் என்றார். 

    • கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.-ஐ 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய்ம் பிடித்தம் செய்யப்படும்.

    வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. கார்டு மூலம் பணம் எடுத்தல், ஸ்டேட்மென்ட் உள்ளிட்டவைகளுக்கு ஏ.டி.எம். இயந்திரத்தை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

    எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

    • ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
    • கவுகாத்தியில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர்.

    ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் புதிய விதிகளை கொண்டுவருவதை ஐபிஎல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் புதிய விதிகளை கொண்டுள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு புதிதாக கலை நிகழ்ச்சியில் ஒரு புது முயற்சியை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஆனால் இந்த முறை 12 மைதானங்களில் நடக்கும் தொடக்க போட்டியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடிய தொடக்க ஆட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அந்த வகையில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி கவுகாத்தியில் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சாரா அலி கானின் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
    • ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

    ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.

     பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.

    சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார். 

    • விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் Once More
    • ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.

    இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான எதிரா? புதிரா? பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் சத்யபிரகாஷ் பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • கட்சியை விட தமிழக மக்களின் நலன் தான் முக்கியமானது.
    • கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்பேது அவர் கூறியதாவது:-

    2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

    கூட்டணிக்கான காலத்திற்கு இன்னும் அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து தற்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை.

    அரசியலில் கள நிலவரத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். மைக்கில் பேசுவது அரசியல் அல்ல, களத்தில் வேலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்திருந்தார்.
    • வானூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள அனுமதி.

    காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சினார்.

    இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.

    குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை சல்மான் கான் கூறியதாவது " ரஜினிகாந்த், சிரஞ்சீவி காரு, சூர்யா, ராம் சரண் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் இந்தி திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதில்லை. அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம், "பாய்.. பாய்" என என்னை அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு செல்வதில்லை" என அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    ×