என் மலர்

    தமிழ்நாடு

    குளித்தலை அருகே  பறக்கும் படை குழுவினரின் அதிரடி சோதனையில் ரூ.5.83 லட்சம் சிக்கியது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை குளித்தலை ஆர்.டி.ஓ. தனலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி.

    குளித்தலை அருகே பறக்கும் படை குழுவினரின் அதிரடி சோதனையில் ரூ.5.83 லட்சம் சிக்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது.
    • ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். குளித்தலை அருகே கரூர் முதல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது பெட்டவாயிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது,

    தொடர்ந்து மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது மற்றொரு வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஜீவா தெரு கலைவாணன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது. சரியான ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்பு அந்த பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை ஆர்.டி.ஓ. தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

    அப்போது குளித்தலை வட்டாட்சியர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், குளித்தலை வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா மற்றும் காவல்துறையினர் இருந்தனர்.

    Next Story
    ×