அரசு நிலங்களை அபகரிக்க உதவும் புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்- சீமான்
அரசு நிலங்கள் பெருமளவில் கொள்ளைபோக வழிவகுக்கும் வகையில் திமுக அரசால் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வுத்தரவு கண்டனத்திற்குரியது என சீமான் கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம்

சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் நலனை விட, வறட்டு கவுரவத்தை பெரிதாக கருதும் திமுக அரசு- அண்ணாமலை குற்றச்சாட்டு

மத்திய அரசை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதிகார மமதையின் உச்சத்தில் ஆட்சியாளர்கள்... பாஜக தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு

காவல்துறை தன் கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு நியாயமான நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கலைஞர் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- ராமதாஸ்

மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் ஆய்வு செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா- அதிபட்சமாக சென்னையில் 28 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து 16-ந்தேதி அரிசி, மருந்து அனுப்பப்படுகிறது: பார்சல் செய்யும் பணிகள் தீவிரம்

முதல் கட்டமாக வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கை செல்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அரிசி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது- மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. அரசு உழவர்களிடம் இருந்து கருத்துக்களைப்பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு, தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றுவோம் என்று அறிவித்த அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதியக் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே போவது மிகுந்த கவலை அளிக்கிறது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
வாகனங்களில் ‘ஜி' அல்லது ‘அ' என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை - தமிழக அரசு

அரசு வாகனம் தவிர மற்ற வாகனங்களில் ‘ஜி' அல்லது ‘அ' என்ற எழுத்துகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப தமிழக அரசு தீவிரம் - முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு

நிவாரண பொருட்களை டெல்லி வழியாக இலங்கைக்கு அனுப்புவதா? அல்லது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இங்கிருந்து அனுப்புவதா? என்பது பற்றி இன்று முடிவு செய்யப்படுகிறது.
ரேசன் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய குழு அமைப்பு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது
தி.மு.க. அரசின் செயல்பாட்டால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- மு.க.ஸ்டாலின் பேச்சு

பெண்கள் கல்வியை மட்டும் கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் எத்தனை வித தடைகளையும் எதிர்கொள்ள முடியும் என தேனியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மே 1-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்- தமிழக அரசு அறிவிப்பு

கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முதலில் மத்திய அரசு குறைக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு தமிழக அரசு பதில்

“பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறியதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

விக்னேசின் மரணத்திற்கு நீதி கிடைக்க காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.