பொள்ளாச்சி பாலியல் விவகாரம்- துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- ஹெரேன் பாலிடம் சி.பி.ஐ. விடிய விடிய விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹெரேன் பாலிடம் டி.எஸ்.பி. ரவி தலைமையிலான போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ நாளை மனுதாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை கோவை மகிளா கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
கோவையில் தி.மு.க. எம்பி கனிமொழி தடுத்து நிறுத்தம்

கோவை ஈச்சனாரி அருகே தி.மு.க. எம்பி கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் - வைகோ

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அனைவரையும் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- மேலும் 3 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-ம்தேதி பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்: முக ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்து தண்டிக்க வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி கனிமொழி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ திட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைதாக வாய்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைதாக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளி ஒருவர் கூட தப்பித்து விடாதபடி நடவடிக்கை- ஸ்டாலின், கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகளில் ஒருவர் கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின், கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூன்று பேரையும் ஜனவரி 20ந்தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.