நாயகன் நந்தகுமாரும், நாயகி லீமாவும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இதே ஊரில் இருக்கும் சரவண சக்தி, பார்க்கும் பெண்களை எல்லாம் அடைய வேண்டும் என்று இருக்கிறார். இந்நிலையில், மர்மமான முறையில் நாயகன் நந்தகுமார் கொலை செய்யப்படுகிறார்.
இறந்த நந்தகுமார் பேயாக மாறி அதே ஊரை சுற்றி வருகிறார். இவர் எப்படி இறந்தார்? நாயகி லீமாவை எப்படி பாதுகாத்தார்? ஊர் மக்களுக்கு பேய் இல்லை என்று புரியவைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் நந்தகுமாருக்கு இதுதான் முதல் படம். விறுவிறுப்பான நடிப்பாலும், பேயாக வந்து பயமுறுத்தவும் செய்திருக்கிறார். நாயகி லீமா அழகாக வலம் வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சரவண சக்தி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் மனதில் பதியவில்லை.
பரிமளவாசன் இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாகவும், கேட்கும் படியாகவும் இருக்கிறது. பாடல் வரிகளும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக பேய் பாடும் பாடல் சிறப்பு. கேசவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
பேய், ஆவிகள் பற்றி கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர். வழக்கமான கதையாக இருந்தாலும், அதில் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் ‘சூறகாத்து’ சுமாரான காத்து.
மேலும் விமர்சனம் செய்திகள்
- ரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
- ஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்
- பணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்
- நடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
- தந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்